*ஆயுத
எழுத்து*
“எங்கள் குடும்பம்
தமிழ்க் குடும்பம்.
ஒவ்வொருவர்
ஒவ்வொர் இனம்.
மாமியார்
கசடதபற.
மாமனார்
ஙஞண நமன.
மணாளன்
யரல வழள.
மருமகள்
நான்மட்டும்
அவர்களுக்கு
ஆகாத
அக்கன்னாவாக..!
அடுத்த வீட்டுத் தோழியிடம்
என் அவலத்தைச் சொன்னேன்
அடியே
அக்கன்னாதானடி
ஆயுத எழுத்து..!
அடுத்த நாளே
நான் ஆயுத எழுத்து
என்பதை
அவர்களுக்குப்
புரியவைத்தேன்.
இப்போது
மாமியார்
மாமனார்
மணாளன்
மூவரும் என்
முந்தானையில்..!”
*கிருட்டிணமூர்த்தி –
{மின் இலக்கியப்பூங்கா
புலனம் பதிவு}*
No comments:
Post a Comment