*கடவுளுக்கான இடம்*
“கடவுளுக்கான இடம்
எல்லா
வீடுகளிலும் இருக்கிறது.
சில
வீடுகளில்
பிரம்மாண்டமான
பூஜை அறையில்...
சில வீடுகளில்
புத்தக
அலமாரிகளில்...
சில
வீடுகளில்
கடுகு, சீரக டப்பாக்களுக்கு
மத்தியில்...
பேச்சுலர்களின்
அறைகளில்
ஒற்றை
விநாயகர் பொம்மையாய்...
கடவுளுக்கான
இடம்
எல்லா
வீடுகளிலும் இருக்கிறது..!”
*சமுத்ரா*
No comments:
Post a Comment