எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 18 July 2020

படித்ததில் பிடித்தவை (“எங்குமே பார்க்காதது போல்” – கல்யாண்ஜி கவிதை)



*எங்குமே பார்க்காதது போல்*

உங்களை பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

தபால் பெட்டியில் கடிதம் இடுபவராக,
ஆதார் அட்டை வரிசையில் நிற்பவராக,
மீன் வியாபாரியிடம் சிரித்துப் பேசுபவராக,
மழையில் வாகனம் ஒட்டிச் செல்பவராக,
கண் மருத்துவமனையில் சோதிக்கப் படுபவராக,
மரண வீட்டில் நாற்காலியில் குனிந்திருப்பவராக,
புதிய சுவரொட்டியை ஆர்வமாக வாசிப்பவராக,
கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துக்கொடுப்பவராக,
தலைக்கவசம் அணியாமல் காவலரிடம் கெஞ்சுபவராக,
பலூன் விற்பவரிடம் நீல பலூன் வாங்குபவராக...

இவ்வளவு இடங்களில் பார்த்திருக்கிற என்னை
எங்குமே பார்க்காதது போல் உங்களால்
போக முடிவது எப்படி?

*கல்யாண்ஜி*

No comments:

Post a Comment