எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 6 July 2020

படித்ததில் பிடித்தவை (“உள்ளங்கை சில்லறை” – கல்யாண்ஜி கவிதை)



*உள்ளங்கை சில்லறை*

இன்று தர்பூசணிக்
கீற்றுகள் விற்கிறேன்.

எவ்வளவு என்று விலை கேட்டு
உள்ளங்கை சில்லறை நோக்கி
வாங்காமல் போகிறாள்
வேறெங்கோ பார்க்கும் முகத்துடன்
செம்பட்டை முடிச்சிறுமி.

அந்த உள்ளங்கை சில்லறைக்கு
இந்த உலகத்தையே விற்றுவிடும்
வேறேதேனும் வியாபாரம் செய்ய
இப்போது
விருப்பம் எனக்கு..!

*கல்யாண்ஜி*

No comments:

Post a Comment