எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 11 July 2020

படித்ததில் பிடித்தவை (“அந்த ஒற்றைக் கை” – திரியம்பக சப்காலே கவிதை)



*அந்த ஒற்றைக் கை*

படங்கள் நிறைந்த புத்தகமொன்றைப்
புரட்டிக் கொண்டிருந்தேன்.
எனது குட்டிப் பையன் ராஜா வந்தான்
தானும் எட்டிப் பார்த்தான்.

ஒரு படத்தில்
ஏழை ஒருவனைப் பணக்காரன்
அடித்துக் கொண்டிருந்தான்.

ராஜா கேட்டான்:
இவனை ஏம்பா அவன் அடிக்கிறான்?
ஏனென்றால் அவன் பண்ணைக்காரன்.

அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.
மீண்டும் அதே பணக்காரன்-அவனது
ஓங்கிய வலது கையில் ஆயதம்
அதே ஏழையைக் கொல்ல.

ராஜா இதைப் பார்த்தான்.
ஒரு நிமிஷம் இருப்பா’ –
எனக் கட்டளையிட்டான்.

வேகமாக மேசைக்கு ஓடிப்போய்
பிளேடு ஒன்றைக் கொண்டு வந்தான்.

பணக்காரனின்
வலது கரத்தை தோளிலிருந்து
வெட்டி எடுத்து விட்டான்.
பெருமிதம் அவன் முகத்தில்.

நான் சொன்னேன்
அவனுக்கு ஆள்பலம் அதிகம்
சும்மா விடமாட்டார்கள்.

ராஜா இடைமறித்தான்.
முடியாது
அவர்கள் அடிக்கமுடியாது.
அந்த ஒற்றைக் கரத்தின் நினைப்பு
ஒரு போதும் மறவாது அவர்களுக்கு..!

*திரியம்பக சப்காலே*

{புதிய சூரியனுக்கு அனுமதி இல்லைநவீன மராத்தி தலித் கவிதைகள் ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம்.}

No comments:

Post a Comment