*எறும்பு*
“எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?
உன்
வேலியற்ற உடம்பில்
விளையாட்டாய் ஊறினால்
உயிர்ப்பலி கேட்குதா… விரல்?
மீறிக் கடித்தாலும்
சாவு உனக்கில்லையெனத்
தெரிந்தும்
ஊறும் எறும்பை
நசுக்குவதேன் சகிக்காமல்?
சாகும் எறும்பின்
சத்தமற்ற முடிவு
நசுக்கும் மனத்தைக்
குற்றமில்லை என்கிறதா?
உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்புதானென்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?”
*வைத்தீஸ்வரன்*
No comments:
Post a Comment