எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 3 July 2020

படித்ததில் பிடித்தவை (“அவன் எப்போது தாத்தாவானான்?” – விக்ரமாதித்யன் கவிதை)


*அவன் எப்போது தாத்தாவானான்?*

தெருவில்
விளையாடிக்கொண்டிருந்தான்.

பள்ளிக்கூடம்
போய்க்கொண்டிருந்தான்.

வேலை
பார்த்துக்கொண்டிருந்தான்.

ஊர்
சுற்றிக்கொண்டிருந்தான்.

கவிதை
எழுதிக்கொண்டிருந்தான்.

குடித்துக்
கொண்டிருந்தான்.

பிள்ளைகளை ஆளாக்க
பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தான்.

ஜோதிடம்
கற்றுக்கொண்டிருந்தான்.

ஸ்தலயாத்திரை
செய்துகொண்டிருந்தான்.

என்னவெல்லாமோ
பண்ணிக்கொண்டிருந்தான்.

எப்படியெல்லாமோ
இருந்துகொண்டிருந்தான்.

இப்போது பார்த்தால்
தாத்தா என்கிறார்கள்.

இன்னும் அவன்
கல்லத்திமுடுக்குத் தெருவிலேயே
நின்றுகொண்டிருக்கிறான்..!

    *விக்ரமாதித்யன்*

No comments:

Post a Comment