எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 1 July 2020

படித்ததில் பிடித்தவை (“முதுமை” – மகுடேசுவரன் கவிதை)



*முதுமை*

நடந்த தடங்களில்
பின்னோக்கி நடப்பதற்கும்

பாதையோரத்தை
அன்போடு பார்ப்பதற்கும்

தொடங்கிய இடத்திற்கு
நன்றி சொல்வதற்கும்

குரைக்க எழுந்த நாயை
அமர்த்துவதற்கும்

எதிர்பட்டவர்களின்
இன்முகம் காண்பதற்கும்

ஒரு காலம்
வாய்க்கும்.

அதை முதுமை
என்கிறோம்..!

 *மகுடேசுவரன்*

No comments:

Post a Comment