எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 5 July 2020

படித்ததில் பிடித்தவை (“வாடகை?” – ஜெயபாஸ்கரன் கவிதை)


*வாடகை?*

வாடகை
ஆயிரம் ரூபாய்.

குடிநீருக்கு
ஐம்பது.

மின்சாரத்திற்கு
மாதந்திரக்
குத்துமதிப்பாக
இருநூறு.

முறைவாசலுக்கும்
கழிவறைக்கும்
முப்பது ருபாயாம்.

ஆகமொத்தம்
ஆயிரத்து இருநூற்று
எண்பது ருபாயை
தேதி தவறாமல்
கொடுத்து வருகிறேன்
வீட்டுக்காரனுக்கு.

நாள் கடத்தாமல்
வாடகை தருவதாக
என்னை
வியந்து போற்றுகிறான்
வீட்டுக்காரன்.

அவனிடம்
சொல்லிக் கொள்வதில்லை
நான்.

கொடுக்கிற வாடகை,
வீட்டருகே கூவும்
வேப்பமரத்துக் குயிலுக்காகவும்
உனக்குத் தெரியாமல்
வந்து போகும்
காற்றுக்காகவும் தான்
என்று..!


*ஜெயபாஸ்கரன்*

1 comment:

  1. வாடகை வீட்டில் வசிப்பவர்களின் அனுபவங்கள் பல நேரங்களிலும் பலருக்கும் கசப்பாகவே இருக்கிறது. ஆனால் இங்கே இயற்கையை ரசிக்கத் தெரிந்த இந்தக் கவிஞனுக்கு அதுவே சுகமாக இருக்கிறது. வாசியுங்கள் தோழமைகளே!

    *சக்கையா*
    (புலனம் "மின் இலக்கியப் பூங்கா" பதிவு)

    ReplyDelete