*தேடல்*
“பார்த்தாயா?
இதைத்தான்
இவன்
இவ்வளவு
நாட்களாகப்
படித்துக்கொண்டிருக்கிறான்
என்று...
மேசைப்புத்தகத்தின்
பக்கங்களை
ஒவ்வொன்றாக
விரித்துக் காட்டுகிறது
மின்விசிறி
ஜன்னலருகில்..!
எழுத்தறிவற்ற
அந்தியொளியோ
மஞ்சள்
கைகளால் தடவித்தடவி
இல்லாத
சித்திரங்களைத் தேடுகிறது..!”
*யூமா வாசுகி*
No comments:
Post a Comment