எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 9 March 2021

படித்ததில் பிடித்தவை (“இன்னொரு நீ இன்னொரு நான்” – பிருந்தா சாரதி கவிதை)

 

*இன்னொரு நீ இன்னொரு நான்*

 

நீயும் நானும்

சந்திக்கும் போது

நாம் இருவர் மட்டும்

சந்திப்பதில்லை.

 

நமக்குள் இருக்கும்

இருவர் கூட

சந்தித்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் உனக்குள் இருக்கும் ஆணும்

எனக்குள் இருக்கும் பெண்ணும்.

 

நம் நிழல்களின் நிழலாய் வாழும்

ரகசிய ஜீவன்கள் அவர்கள்.

 

நாம் பேசும் போது

நம்மையே மௌனமாய்

கவனித்துக் கொண்டிருப்பார்கள்

நம் வார்த்தைகளின் பொய்களை கேலி செய்தபடி.

 

நாம் மௌனமானால்

தொடங்கும் அவர்களின் உரையாடல்.

 

ஒருநாள் அவர்களின்

பேச்சைக் கவனித்தேன்.

 

அப்போது தெரிந்தது

உனக்குள் எவ்வளவு ஆசைகள் இருக்கின்றன என்பதும்

எனக்குள் எவ்வளவு வெட்கம் இருக்கிறது என்பதும்..!

 

*பிருந்தா சாரதி*


5 comments:

  1. ஆண் கவிதை எனவும் வாசித்தேன். நல்ல கவிதை.

    ReplyDelete
  2. நந்தகுமார்9 March 2021 at 07:56

    அருமை.

    ReplyDelete
  3. கெங்கையா9 March 2021 at 08:51

    கவிதை மிக
    அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்9 March 2021 at 13:07

    உள்ளங்களின்
    உரையாடலை
    அழகாக
    வடித்தெடுத்த
    கவிதை.
    கவிஞரின் கவிதை
    வித்தியாசமான
    கோணத்தில்...
    மிக அருமை.

    ReplyDelete