எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 19 March 2021

படித்ததில் பிடித்தவை (“மலையும்...நானும்..!” – லி போ கவிதை)

 


*மலையும்...நானும்..!*

 

பறவைகள் அனைத்தும் பறந்து மறைந்தன;

ஓர் ஒற்றை மேகம் மிதக்கிறது.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதில்

நாங்கள் சலிப்பதே இல்லை -

அந்த மலையும் நானும்..!

 

*லி போ*

(சீனக் கவிஞர்)




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    லி பை அல்லது லி போ
    (Li Bai அல்லது Li Po.
    சீனம்: 李白; பின்யின்:
    Lǐ Bái / Lǐ Bó)
    ஒரு சீனப் புலவர் ஆவார்.
    வாழ்ந்த வருடங்கள் : 701-762.
    இன்னொரு சீனப் புலவரான
    டு ஃபுவும், லி பையும்
    சீன இலக்கிய வரலாற்றில்
    இரண்டு பெரும் புலவர்களாகக்
    கணிக்கப்படுகின்றனர்.
    லி பை எழுதிய ஏறத்தாழ
    1,100 பாடல்கள் இன்று
    கிடைக்கின்றன.
    இவரது பாடல்களின் முதல்
    மேற்கத்திய மொழியிலான
    மொழிபெயர்ப்பு 1862ல்
    மார்க்குயிஸ் டி'ஹார்வி டி
    எயிண்ட்-டெனிஸ் என்பவரால்
    பிரெஞ்சு மொழியில்
    வெளியிடப்பட்டது.
    1901 ஆம் ஆண்டில்
    ஹேர்பேர்ட் அலன் கைல்ஸ்
    என்பவர் சீன இலக்கியத்தின்
    வரலாறு பற்றி எழுதிய
    ஆங்கில நூலில் லி பையின்
    கவிதைகளை ஆங்கில மொழி
    வாசகர்களுக்கு அறிமுகம்
    செய்தார்.
    எஸ்ரா பவுண்ட் என்பவர்
    லி பையின் கவிதைகளை
    யப்பானிய மொழியில்
    மொழிபெயர்த்து வெளியிட்டார்.

    லி பை அவரது கவிதைகளில்
    காணப்படும் மிகுந்த
    கற்பனைத் திறனுக்காகவும்,
    தாவோயிச
    கருத்துக்களுக்காகவும்,
    மதுபானம் மீது அவர் கொண்ட
    காதலுக்காகவும் பெரிதும்
    அறியப்பட்டவர்.
    இவரும் தனது வாழ்வின்
    பெரும்பகுதியைப் பயணம்
    செய்தே கழித்தார்.

    யாங்சி ஆற்றில் படகில்
    பயணம் செய்து
    கொண்டிருந்தபோது
    நீரில் தெரிந்த சந்திரனின்
    பிம்பத்தைப் போதையில்
    கட்டியணைக்க முற்பட்டதனால்
    இவர் நீரில் மூழ்கியதாகச்
    சொல்லப்படுகின்றது.

    ReplyDelete
  2. ஜெயராமன்19 March 2021 at 06:52

    அருமை... அருமை..!

    ReplyDelete
  3. கெங்கையா19 March 2021 at 10:59

    அருமையிலும் அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்19 March 2021 at 18:53

    ஆர்பரிக்கும் கடல்,
    வளைந்தோடும் ஆறு,
    நெடிய மலை இவற்றை
    பார்த்துக்கொண்டே
    இருப்பது எப்போதும்
    மகிழ்வு, பிரமிப்பு தான்.

    ReplyDelete