*குருவிகள் சப்தம்*
“துணி துவைத்துக்
கொண்டிருந்தேன்
காதில்
விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து
துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில்
விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த
துணி எடுத்தேன்
காதில்
விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்..!”
*தேவதச்சன்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDeleteதேவதச்சன்
(பிறப்பு: 1952) என்ற
புனைபெயரில் அறியப்படும்
தமிழ்க் கவிஞரின் இயற்பெயர்
எஸ்.ஆறுமுகம் ஆகும்.
இவர் தூத்துக்குடி மாவட்டம்,
கோவில்பட்டியில் 1952-ல்
பிறந்தவர் ஆவார்.
இவர் தமிழில்
மிகச் சிறந்த
நவீன கவிஞர் ஆவார்.
தமிழ் நவீன இலக்கிய
வரலாற்றில், 1970-களில்
வந்த கசடதபற, ழ
இதழ்களில் எழுதத்
தொடங்கினார்.
அயல்நாட்டிலிருந்து தரப்படும்
இலக்கியத்திற்கான “விளக்கு”
விருது பெற்றவர்.
தமிழ் நாட்டில் வழங்கப்படும்
“விஷ்ணுபுரம்” விருது (2015)
பெற்றவர்.
அருமை...அருமை..!
ReplyDeleteபறவைகளின் ஓலியைக்
ReplyDeleteகூர்ந்து கவனிப்பது
மன அழுத்தத்தில்
இருந்து விடுபட
மிக பெரும் மருந்து.
ஆசிரியர் குறிப்பு
ReplyDeleteகவிஞர்களைப் பற்றி
அறிந்து கொள்ள உதவும்
நல்ல முயற்சி.
இயன்றால்
புகைப்படத்தையும்
பதிவிடலாம்.
இனி வரும் பதிவுகளில்
Deleteபுகைப்படத்தையும்
பதிவிடுகிறேன்.
நன்றி.
🙏
கவிஞர்
ReplyDeleteஎனது ஊர்
ஆகும்.
பாராட்டுக்கள் பல...