எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 29 March 2021

படித்ததில் பிடித்தவை (“ஆயிரம் இலைகளே...” - மனுஷ்யபுத்திரன் கவிதை)

 


*ஆயிரம் இலைகளே...*

 

தானும் ஒரு உதிரும் இலைதான் என

அறிந்துகொள்ளும் நாள்வரை

இலை நினைத்துக்கொண்டிருந்தது

தான்தான் மரமென…

 

அப்படியெனில்

மரம் என்பது என்ன?

அது ஆயிரம் ஆயிரம்

உதிரும் இலைகளின்

துயரக் கூட்டம்..!

 

*மனுஷ்யபுத்திரன்*




6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மனுஷ்ய புத்திரன்*
    (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற
    பெயரில் எழுதிவரும்
    எஸ். அப்துல் ஹமீது,
    திருச்சி மாவட்டம்,
    துவரங்குறிச்சியில் பிறந்தார்.
    எண்பதுகளின் ஆரம்பத்தில்
    எழுதத் துவங்கிய இவர்
    கடந்த 20 ஆண்டுகளாக
    பத்திரிகை ஆசிரியர்,
    கவிஞர், இலக்கியவாதி,
    அரசியல்வாதி என
    பல்வேறு பணிகளில்
    ஈடுபட்டு வருகின்றார்.
    தற்போது சென்னையில்
    வசிக்கும் இவர் உயிர்மை
    பதிப்பகம், உயிர்மை இதழ்
    போன்றவற்றை நடத்தி
    வருகிறார்.

    கவிதைத் தொகுப்புகள்:

    1. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
    2. என் படுக்கையறையில் யாரோ
    ஒளிந்திருக்கிறார்கள் (1993)
    3. இடமும் இருப்பும் (1998)
    4. நீராலானது (2001)
    5. மணலின் கதை (2005)
    6. கடவுளுடன் பிரார்த்தித்தல்
    (2007)
    7. அதீதத்தின் ருசி (2009)
    8. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
    9. பசித்த பொழுது (2011)
    10. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
    11. அருந்தப்படாத கோப்பை (2013)
    12. தித்திக்காதே [2016]

    ReplyDelete
  2. சத்தியன்29 March 2021 at 09:25

    உண்மை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்29 March 2021 at 10:53

    "நினைப்பு பொழப்பை
    கெடுக்கும்" என்ற
    பழமொழி நினைவிற்கு
    வருகிறது.

    ReplyDelete
  4. கெங்கையா29 March 2021 at 14:01

    மனுஷ்யபுத்திரன்
    கவிதை அருமை.

    ReplyDelete
  5. அவரவர் பார்வை. கவிஞர் இலையுதிர் காலத்தின் சோகத்திலேயே உறைந்து விட்டார். வசந்தம் வரும். புத்தம் புதிதாய் பசுமையான இலைகள் தோன்றி பூத்து காய்த்து பழுத்து பறவைகளோடு கொண்டாடும் மரம். பழையன கழித்து புதிதாய் உயிர்த்து மகிழ்வதே மரம். ஆகா!

    ReplyDelete
  6. Pleasant feelings

    ReplyDelete