எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 27 March 2021

படித்ததில் பிடித்தவை (“மல்லீப்பூ மொளம் பத்து ரூவா” – சுகுமாரன் கவிதை)

 


*மல்லீப்பூ மொளம் பத்து ரூவா*

 

சிறுகையால் சரமளந்து

கொஞ்சம் கொசுறும் விட்டுக் காண்பித்த

பூக்காரக் குழந்தையிடம் சொன்னார்:

இந்த முழத்துக்கா பத்து ரூபாய்..?’

 

சரத்தை வாங்கி

நெடுங்கையால் துல்லியமாக அளந்து காட்டி

முறித்து வாங்கினார்,

 

நெடிய முழத்துக்கும் சின்ன முழத்துக்கும்

இடையிலான துண்டுச்சரத்தில்மட்டும்

மல்லிகைகள்

வாடியிருந்தன சோகம் தாளாமல்..!

 

*சுகுமாரன்*




9 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் நா.சுகுமாரன்*
    (பிறப்பு: ஜூன் 11, 1957;
    கோவை, தமிழ்நாடு)
    ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார்.
    கவிதை, மொழிபெயர்ப்பு,
    விமர்சனம், இதழியல்,
    தொலைக்காட்சியின்
    செய்தி ஆசிரியர்
    எனப் பல்வேறு
    பரிமாணங்களில் இவர்
    இயங்கிக்கொண்டிருக்கிறார்.

    சென்னை பல்கலைக்கழகத்தில்
    பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற
    சுகுமாரன்,
    அடூர் கோபாலகிருஷ்ணனின்
    சினிமா பற்றிய
    புத்தகமொன்றை
    (சினிமா அனுபவம்) தமிழில்
    மொழிபெயர்த்திருக்கிறார்.

    'காலச்சுவடு' பத்திரிகையின்
    பொறுப்பாசிரியராகப்
    பணியாற்றுகிறார்.

    இவர் எழுதிய
    கவிதைத் தொகுப்புகள் :

    கோடைக்காலக் குறிப்புகள்(1985)
    பயணியின் சங்கீதங்கள் (1991)
    சிலைகளின் காலம்(2000)
    வாழ்நிலம் (2002)
    பூமியை வாசிக்கும் சிறுமி (2007)

    கட்டுரைகள் :

    திசைகளும் தடங்களும் (2003)
    தனிமையின் வழி ( 2007)
    இழந்த பின்னும் இருக்கும்
    உலகம் (2008)
    வெளிச்சம் தனிமையானது (2008)

    ReplyDelete
  2. சத்தியன்27 March 2021 at 11:53

    அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. சந்திரன்27 March 2021 at 11:56

    அருமையான கவிதை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்27 March 2021 at 13:46

    விட்டுக்கொடுக்க
    மனமில்லாத
    பெரிய மனம்,
    பிஞ்சு மனத்தை
    வாடவைத்ததை
    கவிஞர் அற்புதமாக
    வடித்துள்ளார்.
    மனதை தைத்த
    கவிதை.

    ReplyDelete
  5. Super.
    Good one.

    ReplyDelete
  6. சிறுமியின் கைபடாத துண்டுச் சரம் வாடிவிட்டது.

    ReplyDelete