எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 15 March 2021

படித்ததில் பிடித்தவை (“நான் பெண்” – அனார் கவிதை)

 


*நான் பெண்*

 

ஒரு காட்டாறு

ஒரு பேரருவி

ஓர் ஆழ்கடல்

ஓர் அடைமழை

நீர்  நான்.

 

கரும்பாறை மலை

பசும் வயல்வெளி

ஒரு விதை

ஒரு காடு

நிலம் நான்.

 

உடல் காலம்

உள்ளம் காற்று

கண்கள் நெருப்பு

நானே ஆகாயம்

நானே அண்டம்

எனக்கென்ன எல்லைகள்

நான் இயற்கை

நான் பெண்..!

 

*அனார்*


5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    அனார்:

    இலங்கையின்
    கிழக்கு மாகாணத்திலுள்ள
    கிராமம் ஒன்றில் பிறந்த
    இவரின் இயற்பெயர்
    இஸ்ஸத் ரீஹானா.
    சவுதி அரேபியாவில்
    வசித்து வருகிற
    இவரின் கவிதைகள்
    இலக்கியச் சிற்றேடுகளில்
    வெளிவந்துள்ளன.
    வானொலியிலும்
    ஒளிபரப்பாகியுள்ளன.

    ReplyDelete
  2. சத்தியன்15 March 2021 at 08:54

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்15 March 2021 at 12:53

    கவிதையில்
    கவிஞர் அனுபவிக்கும்
    சுதந்திரக் காற்றை
    அவர் சார்ந்த சமுகம்
    பெண்களுக்கு
    உண்மையாக அளிப்பது
    எந்நாளோ?

    ReplyDelete
  4. கெங்கையா15 March 2021 at 16:25

    கவிதை அருமை.

    ReplyDelete