“நெஞ்சை அடைக்கும்
துயரங்களை
பூவரச
மொட்டுகள் பார்த்து புலம்பினேன்.
பூத்து
விசிறிய போது அறிந்து
நெகிழ்ந்தேன்
அதன்
ஆறுதல் மொழியை..!
ஆண்டனாவில்
உட்கார்ந்திருந்த
காகத்திடம்
சொன்னேன்
கரைந்து... பறந்தது…
பகிர்தலாய்..!
பூனையின்
பளிங்குகண் பார்த்துக் கூறினேன்
‘நானிருக்கிறேன்’
வால்
உரச நெருங்கி
உட்கார்ந்து
கொண்டது...
விட்டிருக்கலாம்
அத்துடன்
உன்னிடம்
கூறாமல்..!”
*கவிஞர் இளம்பிறை*
கவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteஅருமை..!
அருமை
ReplyDeleteமனிதர்களை விட
ReplyDeleteஇயற்கையும்,
விலங்கினங்களுமே
மனத்துன்பத்திற்கு
ஆறுதலை அளிக்கும்
தன்மையின்.