*தூய்மை
அடைந்துவிட வேண்டும் உன் மனம்*
“நீரோடை
ஓசையில்லாமல்
வழிந்துகொண்டிருக்கிறது.
அதன் படுகையில்
தம் வண்ண நரம்புகள் யாவும்
தெள்ளத் தெளிவாகப்
புலப்படும்படி
கற்கள் கிடக்கின்றன.
அந்தக் கல்லுக்கும்
காணும் கண்ணுக்கும்
இடையில் உள்ள நீர்த்தெளிவை
உணர்கிறாய்தானே..?
அந்தத் தெளிதூய்மையை
அடைந்துவிட வேண்டும்
உன் மனம்..!”
*மகுடேசுவரன்*
ஆஹா! அழகிய மொழி, வர்ணனை. சிறந்த கருத்து. நன்றி.
ReplyDeleteஅருமை...அருமை..!
ReplyDeleteஅந்த நிலையை
ReplyDeleteஅடைய பெரும்
ஆசைதான்.
அதற்கான பக்குவம்
பெறுவது எந்நாளோ?
கவிதை
ReplyDeleteமிக மிக
அருமை.
அருமை.
ReplyDelete