எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 6 February 2021

படித்ததில் பிடித்தவை (“அப்பாவின் முத்தம்” – யுகபாரதி கவிதை)

 


*அப்பாவின் முத்தம்*

 

பால் வீச்சம்

அடிக்கிற

பருவத்திலேயே

சாராய நெடியை

சரியாகக்

கண்டுகொண்டவன்

நான்.

 

அன்பு போதையில்

அழுத்திக் கொடுத்த

அப்பாவின் முத்தம்

சுர்ரென்று

மூக்கிலேற

 

எப்போது

நினைத்திடினும்

சுணங்கிடுவேன்.

 

அம்மாயெப்படி

ஆயுள் முழுசும்..?

 

*யுகபாரதி*


5 comments:

  1. 'அன்பு போதை', 'முத்தம் சுர்ரென்று மூக்கிலேற…' நல்ல கவிதைத் தெறிப்புகள். மகனுக்கு முத்தத்தின் சாராய நெடி மூக்கிலேற மனைவி அன்பின் வாசனையை முகர்ந்திருக்கலாம். மேலும் காமத்தின் சுவை தனியல்லவா.

    ReplyDelete
  2. சத்தியன்6 February 2021 at 14:18

    அருமை.

    ReplyDelete
  3. Manivannan, S.P.Koil.6 February 2021 at 14:19

    Superb..!

    ReplyDelete
  4. ஸ்ரீராம்6 February 2021 at 18:11

    குடிகாரர்களை கணவனாக வாய்க்கப் பெற்ற மனைவிமார்கள் அனுபவித்தே தீர வேண்டிய கர்மங்களை அழகாக கூறிய கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete