*கிடைக்காத
புத்தகங்கள்*
“முகநூலில் உறவுகளைத் தேடி
புலனத்தில் புன்னகைத்து
பற்றியத்தில் சிக்கிக்
கொண்டு
படவரியில் பின்தொடரும்
காலமிது.
ஆறுதலுக்கு யாருமின்றி
அரவணைக்க கரங்களின்றி
அறையப்பட்ட சிலுவையில்
ஆணியாய் முதியோர்
இல்லங்களில்
தாய் தந்தையர் கிடக்க
முகநூலில் அன்னையர் தின
வாழ்த்துகள்.
முறைக்கு முன்னூறு தடவை
தந்தையர் தின குறுந்தகவல்கள்.
முதியவர்கள்
நூலகத்தில் தேடினாலும்
கிடைக்காத புத்தகங்கள்.
கடந்து வந்த நாட்களெல்லாம்
அனுபவமாய்
பட்ட கஷ்டங்களெல்லாம்
படிப்பினையாய்
பக்கம் பக்கமாக
எடுத்துரைக்கும்.
பாவம் படிக்கத்தான்
யாருக்கும் நேரமில்லை.
முதியவர்கள் முழுநிலவுகள்
அமாவாசையென
அவர்களைத்
துரத்தி விட்டு
மின்விளக்கு ஏற்றி
இருளில் தொலைந்திட
வேண்டாம்..!”
*ஓடைக்கவிஞன்*
முகநூல் : Facebook
ReplyDeleteபுலனம் : Whatsapp
பற்றியம் : Messanger
படவரி : Instagram
பதவுரைக்கு நன்றி.
Deleteஓடைக்கவிஞனின் கவிதையை படித்தவுடன் கண்களில் கண்ணீர். மிக அருமை.
ReplyDeleteசமூக ஊடகங்களில் தொலையும் உறவுகளைப் பற்றிய நல்ல கவிதை. 'மின்விளக்கு ஏற்றி' என்பதை 'மின்மினிகள் பின்னலைந்து' என்று மாற்றிக் கொண்டேன்.
ReplyDelete'மின்மினிகள் பின்னலைந்து' மிகவும் பொருந்தும் வரிகள். கவிதையை மேலும் அழகூட்டும்.
Deleteபெற்றவர்கள் இருக்கும் போது அவர்கள் அருமை நாம் உணர்வதில்லை. அவர்கள் காலத்திற்கு பின் நம்மை பற்றி கவலைப்பட வேறு யாருமில்லை என்பதனை அனுபவத்தில் உணரும் போது அவர்களை நேசிக்க நமக்கு வாய்ப்பில்லை.
ReplyDeleteMy Prayers.
ReplyDelete