எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 2 February 2021

படித்ததில் பிடித்தவை (“காலக்கிளி” – கவிதா சபாபதி கவிதை)

 

*காலக்கிளி*

 

ஒரு சிறகு

கறுப்பு.

மறு சிறகு

வெளிச்சம்.

 

எந்தவொரு

வீதியிலும்

இரை கொத்தாமல்

எந்தவொரு

கிளையிலும்

இளைப்பாறாமல்

 

என்னமாய்

வேகத்துடன் பறக்கிறது

காலக்கிளி..!

 

*கவிதா சபாபதி*


6 comments:

  1. கவிதை நடை சுகமாக உள்ளது. பறவையை காலமாக்கிய கற்பனை நயம். காலம் எதற்காகவும் நிற்பதில்லை என்பதை இரண்டாம் பத்தி மிக அழகாகச் சொல்கிறது. அதுவே இந்த கவிதையின் உச்சம். முதல் பத்தி சற்று இடறுகிறது. இரவு வண்ணமானால் பகலும் அவ்வாறே அமைவது பொருத்தமன்றோ? ஒருங்கிணைந்து அசையும் இரு சிறகுகள் மாறிமாறி வரும் இரவுக்கும் பகலுக்கும் பொருந்துமா?

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிறகு கறுப்பு என்பது இரவையும். மறு சிறகு வெளிச்சம் என்பது பகலையும் கவிஞர் குறிப்பிடுவதாகவே தோன்றுகிறது.

      Delete
    2. இரவு கறுப்பு என்ற வண்ணம் எனில் பகல் அதன் எதிர்மறை வண்ணம் வெள்ளை என இருந்திருக்கலாமா?

      Delete
  2. அருமை.

    ReplyDelete
  3. கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்2 February 2021 at 10:27

    காலச்சக்கரம் அவ்வளவு வேகமாக சுழலவில்லையெனில் வாழும் மனிதர்களில் பாதி மனநோயாளிகள் ஆகி இருப்பார்கள். பறவையின் உவமை மிக அருமை.

    ReplyDelete