*அழகைக்
காப்பாற்ற…*
“உடலழகைக் காப்பாற்ற
உயிரை விட்டேன்.
உரலழகைக் காப்பாற்ற
உலக்கை விற்றேன்.
படையழகைக் காப்பாற்ற
போரை விட்டேன்.
பாத்திரத்தைக் காப்பாற்ற
பாலை விற்றேன்.
கடையழகைக் காப்பாற்ற
சரக்கை விற்றேன்.
கவியழகைக் காப்பாற்ற
கருத்தை விற்றேன்.
குடையழகைக் காப்பாற்ற
மழையின் போது
குடைக்கே நான் குடையாகிக்
குனிந்து சென்றேன்..!”
*கண்ணதாசன்*
மிக அருமையான பதிவு.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteSuper.
ReplyDelete