எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 26 February 2021

படித்ததில் பிடித்தவை (“சுற்றுச் சுவர்களில்...” – கல்யாண்ஜி கவிதை)

 


*சுற்றுச் சுவர்களில்...*

 

எதிர்பார்க்கவே இல்லை

அந்தக் கவிஞரின் புதியவீட்டுச்

சுற்றுச் சுவர்களில்

எந்தப் பறவைகளும்

பூனைக்குட்டிகளும்

அமர முடியாதபடி

கண்ணாடிச்சில்லுகள்

பதிக்கப்பட்டிருக்கும் என..!

 

*கல்யாண்ஜி*


5 comments:

  1. டாக்டர். பா.ராஜேந்திரன்
    அவர்களின் Batchmate group இல்
    வந்த கீழ்காணும் கவிதையைப்
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    *நொண்டிக்காகம்*

    காலையில் கண்ட காட்சி,
    கருங்காகத்தின் கரைச்சல்
    கொரொனாக் காலம்,
    காண மாட்டோம் விருந்தாளி
    காக்காவென கரைந்து ஓய்ந்து
    கண்டம் காணாமல் பறந்தது.

    பறந்த காகம் மதியிழந்து
    மதில் மேல் அமர்ந்தது.
    மதில் முழுதும்
    கண்ணாடிச் சில்கள்.
    கால் பதித்து
    குருதி கண்டதோ!
    வலியில் துடித்து
    வானில் பறந்தாயோ?

    வாளாவிருந்து
    வாக்கிங் தொடர்ந்தேன்.

    நானிங்கே
    நாற்காலியில் சொகுசாக
    சனீஸ்வர ஸ்லோகம்
    படிக்கிறேன்.
    சனி தோஷம் விலக,
    பரிகாரமும் புரிகிறேன்.
    சனியின் தூதனான
    உன்னைக் காக்க வழியின்றி..!

    இறைவனின் பாரபட்சமா?
    மாந்தரின் மடமையா,
    சுயநலமா?
    கள்வனைத் தவிர்க்க
    கணக்கிலடங்கா பாதுகாப்புகள்
    சிறிய கண்ணாடித்துண்டுகள்,
    சுற்றுச்சுவரெங்கும்
    சுயநலச்சிந்தனைகள்.

    ஐந்தரிவு கொண்ட பறவைகள்
    அவர்தம் அவஸ்தைகள்
    ஆற்றிவு கொண்ட நாம்
    அறவே மறந்திட்டோம்.

    சுயநலமான மாந்தர்கள்,
    சிந்தனையற்ற நம் செயல்கள்
    சிலையாய் சமைந்திட்டேன்
    சொல்லொணா வேதனை
    மனதில்.

    நொண்டிக் காகமும்
    நகர்ந்தது கண்ணீருடன்..!

    ReplyDelete
    Replies
    1. கால் பதித்து
      குருதி கண்டதோ!
      வலியில் துடித்து
      வானில் பறந்தாயோ?

      பறந்தாயோ
      looks like
      second Peru.
      Prior to that line
      all in third person.

      பறந்ததோ சரியாகும்
      என்று நினைக்கிறேன்.

      Delete
  2. கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்26 February 2021 at 10:46

    நம்மை தவிர
    இந்த புவியில்
    வேறு ஒன்றும்
    பொருட்டல்ல என்ற
    சுயநல சிந்தனையின்
    வெளிப்பாடு.

    ReplyDelete