*வடை
மழை*
“வயற்காட்டிலிருந்து திரும்பும்போது
கணக்கு வைத்திருக்கும்
மளிகைக் கடையில்
தேன் மிட்டாயோ வரிக்கியோ
மறக்காமல் வாங்கி வருவார்
அப்பா.
வானம் இருட்டிக்கொண்டு
மழை வரும் அறிகுறி
தெரிந்தால்
உளுந்தை ஊறவைத்துவிடுவாள்
அம்மா.
மழை வரும் நாளில் கண்டிப்பாக
வடை சுடுவாள் என்று
தூறலோடு ஓடிவருவார் அப்பா,
அன்றைக்கு மட்டும்
வெறுங்கையோடு.
‘என்ன வாங்கி வந்தேப்பா?’ என்று
ஓடிவரும்
பிரியாக்குட்டியிடம்
அம்மா சொல்வாள்
‘இன்னைக்கு உங்கப்பா
உனக்கு மழை வாங்கி
வந்திருக்கார்’ என.
அதையும் நம்பிவிடுவாள்
மின்னல் கண்ணைப் பறிக்கும்
என்ற பயமின்றி
ஜன்னல் வழியே கைநீட்டி
மழை வாங்கிக்கொள்ளும்
பிரியாக்குட்டி..!”
*சேயோன் யாழ்வேந்தன்*
Praise.
ReplyDeleteஅற்புதம்.
ReplyDeleteமழை
ReplyDeleteவாங்கி வந்திருக்கார்...
அந்த கடைசி வரியும்...
அருமை.
குடும்பத்தின்
ReplyDeleteபரஸ்பர அன்பை
வடையின் மூலம்
வர்ணிக்கும்
அழகான கவிதை.
எம் குழந்தை
பருவ நினைவுகளை
அசை போட வைத்தது.
அருமை.
ReplyDeleteBeating Heart.
ReplyDeleteSuper.
ReplyDeleteArumai.
ReplyDelete