*பெண்களின் தலையணை*
“ஏன் எல்லா பெண்களும்
தலையணை
உறைகளில்
வாத்துகளையே
வரைகிறார்கள்..?
வாத்துகள்
இறக்கை
இருந்தும்
அதிக
உயரம் பறப்பதில்லை.
பிறந்த
வீடு, புகுந்த வீடு
எனப்
பெண்களை
போலவே...
தண்ணீருக்கும், தரைக்கும்
அலைபாய்வதே
வாத்துகளின்
வாழ்க்கை..!”
*நா.முத்துக்குமார்*
No comments:
Post a Comment