*வீடு*
“பேருந்து பயணத்தில்
தினம்
பார்க்கமுடிகிறது
அந்த
வீட்டை.
சாலையோர
தூசிகளை தாங்கி தாழ்வாரம்.
ஈரமற்ற
கிணற்றோரம்.
காக்காயோ
நாயோ
ஈரம்
தேடி ஏமாந்து உருட்டிய வாளி.
அதே
நிலையிலேயே நின்றிருந்த கார்.
நிரந்தரமாய்
தாளிடப்பட்ட கதவு.
ஒருநாள்
கூட
மனித
முகங்களையே வெளிக்காட்டாத அந்த வீட்டில்…
வெறுமையை
மறைக்க
விதம்
விதமாய்
பூத்துக்
குலுங்குகின்றன பூக்கள்
எல்லா
நாட்களிலும்..!”
*அ.வெண்ணிலா*
No comments:
Post a Comment