எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 19 August 2020

படித்ததில் பிடித்தவை (“நினைவு” – அ.வெண்ணிலா கவிதை)



*நினைவு*

சண்டையிட்டுக் கொண்ட
இரவொன்றில்
உன் மேல் பட்ட விரல்கள்
அந்நியன் மேல்பட்ட
உணர்வோடு
உள்ளிழுத்துக் கொண்ட நினைவு
உன்னோடு
சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும்
இந்த கணத்தில்
பின்னிருந்து கண் பொத்தி
விளையாடுகிறது..!

*அ.வெண்ணிலா*

No comments:

Post a Comment