எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 2 August 2020

படித்ததில் பிடித்தவை (“பிறவி” – இன்குலாப் கவிதை)



*பிறவி*

கைகள் அறியுமோ
செடியிலிருந்து பறித்த
பூவின் வலியை..!

ஒருதுளி கூட
இரத்தம் சிந்தாமல்
துடிதுடிக்காமல்
மௌனச் சாவை
அணைத்துக் கொள்ளும்
காய்களும் கனிகளும்.

இன்று வரையில்
என் பசி தீர்த்த
உயிரினங்களை - நாளை
என் உடல் பகிர்ந்தளிக்கப்படும்
உங்கள் சந்ததியினருக்கு
என் புதைகுழி மீது வளரும்
ஒவ்வொரு புல்லிலும்
விரியும் கிளைகளிலும்..!”

*இன்குலாப்*

No comments:

Post a Comment