எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 10 August 2020

படித்ததில் பிடித்தவை (“பசித்த மானிடம்” – ச.தமிழ்ச்செல்வன் கவிதை)



*பசித்த மானிடம்*

கால்களை மடக்கி உட்கார்ந்து பார்த்தான்
ஒரு காலை நீட்டி
ஒரு காலை மடக்கி
கொஞ்சம் பின்னால் சாய்ந்து பார்த்தான்
ஒரு பக்கம் சாய்ந்து உட்கார்ந்து
ஒரு கையை தரையில் ஊன்றி
படுத்து பார்த்தான்

எப்படி உட்கார்ந்து பார்த்தாலும் பசித்தது..!

*ச.தமிழ்ச்செல்வன்*


2 comments:

  1. எதையெதையோ செய்து பார்த்தான். பசி நீங்கவில்லை. வயிற்றுப் பசி மட்டுமல்ல, வேறு பசிகளும். இவ்வாறு நீட்டிக்க இயலும்.

    ReplyDelete
    Replies
    1. அருமை.
      வயிற்றுப்பசி இருக்கும் போது வேறு பசிகள் நினைவில் தோன்றாது. வயிற்றுப்பசி தீர்ந்தப்பின் வேறு பசிகள் தலையெடுக்கும்.

      Delete