எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 9 August 2020

*அப்பாவை நினைத்தப்படி..!*


எனது வருகையை
அறிந்ததுமே
கால் மேல் கால்
போட்டு அமர்ந்திருக்கும்
வயதான அப்பா
காலை எடுத்து
உட்காருவார்.

எனக்குதான்
கஷ்டமாக இருக்கும்.

வீட்டைப் பெருக்கும்
வயதான
வேலைக்கார அம்மாவுக்கு
நானும் காலை எடுத்து
சரியாக உட்காருவது
சந்தோஷப்பட வைக்கிறது...

நல்லப் பழக்கத்தை
அறிவித்த
அப்பாவை நினைத்தப்படி..!”

       *கி.அற்புதராஜு*.

No comments:

Post a Comment