எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 13 August 2020

படித்ததில் பிடித்தவை (“குறுந்தொகை” – நா.முத்துக்குமார் கவிதை)



*குறுந்தொகை*

விடிகாலை நீ தூங்க
விண்மீனில்
விளக்கு வைப்பேன்.
வெந்நீரில் நீ குளிக்க
விறகாகி தீக்குளிப்பேன்.
சாதா டிவி போர் அடிச்சா
சன் டிவி கனெக்ஷன்
வைப்பேன்.

டவுன் பஸ்சில்
கூட்டம் அதிகம்.
டாடா சுமோ
அனுப்பிவைப்பேன்.
நாய்க்குட்டி அது எதுக்கு?
மான்குட்டி வளர்க்க சொல்வேன்.
என்றெல்லாம்
வாக்கு தந்து
ஏமாற்ற மாட்டேன்.

என் சம்பளம் ஆயிரம்தான்
அதுக்குள்ள வாழலாம் வா..!

*நா.முத்துக்குமார்*

No comments:

Post a Comment