*முகங்கள்*
“நிச்சயிக்கப்பட்ட முன்முடிவுகளை நோக்கி
நகர்ந்துகொண்டிருந்தது
மாறுவேடப் போட்டி.
ராஜா
வேடத்தில் வாள்வீசி நடந்த சிறுவன்
கிரீடம்
சரிய இறங்கி வந்து சொன்னான்,
‘கழற்றிவிடு அம்மா தொப்பி
கனக்கிறது.’
உலக
அழகி வேடமிட்ட ஒன்றாம்வகுப்புக் குழந்தை
மேடையில்
சிறுநீர் கழித்து அம்மாவிடம் அடிபட்டது.
காந்தி
வேடதாரி கதராடை புரள வந்து,
‘குளிரெடுக்குது சட்டை
போட்டுவிடு’ என்றான்.
வேஷம்
கலைத்து விளையாடப் போய்விட்டனர்
குழந்தைகள்.
பரிசளிப்பு
விழாவில் கத்திக்கொண்டிருந்தனர்
பெற்றோர்
வேடமிட்டவர்கள்..!”
*மயூரா ரத்னசாமி*
No comments:
Post a Comment