எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 31 December 2021

படித்ததில் பிடித்தவை (“ஒரு மூதாட்டி” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*ஒரு மூதாட்டி*

 

வெளியேற்றப்பட்ட ஒரு மூதாட்டி

நகரத்தின் வீதிகளில்

நடந்து கொண்டிருக்கிறாள்.

 

அவள் பையில் இருக்கிறது

கிழிந்த புடவைகளும் மீதிக் கனவுகளும்.

 

புறக்கணிப்பின் துயரம்

அவள் கண்களில் பெருகுகிறது.

 

ரத்த உறவுகளின் முகவரிகளை

கிழித்து போட்டபடிச் செல்கிறாள்.

 

யாரும் வாய் திறந்து சொல்லவில்லை.

அவள் வெளியேற்றப்பட்டிருக்கிறாள்.

 

சிறு தூறல் அவள் புழுக்கங்களை நனைத்து

ஒத்தடம் கொடுக்கிறது.

 

சாலையோரத் தேநீர் ஒரு சில நிமிடங்களுக்கு

சூடான நட்பாகிறது.

 

சீக்கிரம் போய் சேர்ந்துவிட்ட

தன் கிழவனைத் திட்டியபடி நடக்கிறாள்.

 

 இந்த ஒத்தைச் சுமை

அவள் முதுமையை இன்னும்

பாரமாக்குகிறது.

 

நிராகரிப்பின் கசப்பை

உணர்ந்தபடி நடக்கிறாள்.

 

அவளுக்கான இடம் இல்லையெனினும்

உலகத்தை நிரப்பியபடி

நடந்து கொண்டிருக்கிறாள் அந்த மூதாட்டி..!

 


 *ராஜா சந்திரசேகர்*












8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. ஹரிகுமார்31 December 2021 at 08:57

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்31 December 2021 at 10:32

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. செந்தில்குமார். J31 December 2021 at 12:10

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. செல்லதுரை31 December 2021 at 12:11

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. As I am concerned,
    elders are facing
    more painful situation
    than children.

    But, our society
    is not focusing
    on them as children.

    In my terms,
    they are also
    children with
    experience.

    Our Government
    has more laws and
    facilities for them.
    Still, it is not enough.

    ReplyDelete
  7. As a woman,
    I have no country.
    As a woman,
    my country is the
    whole world.

    -Virginia Woolf

    {கவிதையின் முகப்பில் கவிஞர்
    ராஜா சந்திரசேகர் எழுதியது}

    ReplyDelete