எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 22 December 2021

படித்ததில் பிடித்தவை (“நமது மழை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*நமது மழை*

 

எல்லோரையும் முடக்கிப்

போட்டிருந்தது மழை.

நான் திட்டிக்கொண்டிருந்தேன்.

எப்போதும் மழையைக்

குழந்தை போல ரசிக்கும்

பக்கத்து வீட்டு அக்காவுக்கு

பிரசவ வலி வர

அவசரமாய் ஆட்டோவில்

ஏற்றிக் கொண்டு போனார்கள்.

தலை பிரசவம் என்பதால்

பதற்றம் கூடி இருந்தது.

மழை நிற்காத காலையில்

செய்தி வந்தது

சுக பிரசவம்

ஆண் குழந்தை என்று.

அப்போது பார்த்த மழையை

உள்ளபடியே

ரசிக்கத் தோன்றியது..!

 

*ராஜா சந்திரசேகர்*



5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. கண்ணன்22 December 2021 at 06:12

    நல்ல விஷயங்களை
    நாம் அனுபவிப்பது
    நமது மனநிலை மற்றும்
    சூழ்நிலையையும்
    பொருத்ததுதான்.

    அருமையாக
    சொல்கிறார் கவிஞர்.

    ReplyDelete
  3. நான் திட்டிக்கொண்டிருந்தேன்...
    உள்ளபடியே ரசிக்கத் தோன்றியது...
    மாற்றத்தின் பிறப்பு.. 😀

    ReplyDelete
  4. ஸ்ரீராம்22 December 2021 at 12:35

    மிக அருமை.

    ReplyDelete
  5. நரசிம்மன் R.K27 December 2021 at 14:02

    Super.

    ReplyDelete