எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 1 January 2022

*இரு முகன்*


நகரத்து வீட்டின்

மொட்டை மாடியில்

தண்ணீர் இல்லாமல்

காய்ந்துக் கொண்டிருந்த

தொட்டிச் செடிகளை

மரணத்திலிருந்து மீட்டு

உயிர்ப் பெற காரணமானது

அன்று பெய்த பெருமழை.

 

 

ஒரு வாரமாக தண்ணீர்

ஊற்றாத வீட்டுக்காரரை

அலுவலகத்திலிருந்து

வீட்டுக்கு வருவதற்குள்

வழியெங்கும்

மின்னலிலும், மழை நீரிலும்

மரண பயத்தைக் காட்டி

கதிகலங்க செய்ததும்

அதே பெருமழைதான்..!

 

 

*கி.அற்புதராஜு*

9 comments:

  1. அற்புதமான சிந்தனை அண்ணா 🎉🙏🎉

    ReplyDelete
  2. இருமுகன் தலைப்பு அருமை அண்ணா 🙏

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்2 January 2022 at 09:07

    கவிதை நன்று.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  4. சங்கர்2 January 2022 at 09:15

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  5. செல்லதுரை2 January 2022 at 10:03

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. மோகன்தாஸ். S2 January 2022 at 11:02

    பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. ஸ்ரீராம்2 January 2022 at 11:30

    மிக அருமை.
    மழை உண்டாக்கிய
    இரு வேறு விளைவுகளை
    மிக அழகாக காட்டும்
    கவிதை.

    ReplyDelete
  8. கமல நாதன்2 January 2022 at 23:52

    அருமை

    மனிதர்களைப் போலவே
    மழைக்கும் இரு முகமோ...


    ReplyDelete
  9. நரசிம்மன் R.K3 January 2022 at 07:31

    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete