*சிறுமியின் மரம்*
“தாத்தாவுடன்
வாக்கிங்
போய்விட்டு
வந்த
பேத்தி
அவர்
கால் கழுவி வருவதற்குள்
வரைந்ததைக்
காட்டினாள்.
பேத்தியின்
பிஞ்சு கிறுக்கலில்
நிமிர்ந்து
நின்றது
ஒரு
மரம்.
கன்னத்தைத்
தட்டி
பாராட்டு
சொன்ன
தாத்தாவைக்
கேட்டாள் சிறுமி.
இது
எந்த மரம் சொல்லுங்க..?
விழித்து
நின்ற தாத்தாவுக்கு
விடை
சொன்னாள்.
நடந்து
போனப்ப
நாம
பாத்தமே
நீங்க
கூட சொன்னீங்களே
இது
புயல்ல சாஞ்ச மரம்னு
அதுதான்
தாத்தா இது
நான்
நிக்க வச்சிருக்கேன்..!”
*ராஜா சந்திரசேகர்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் ராஜா சந்திரசேகர்*
பிடித்த வாசகம்:
"என்னவும் செய்.
செய்வதில் நீ இரு."
ராஜா சந்திரசேகர் எழுதிய
கவிதைத்தொகுப்புகள்:
1. கைக்குள் பிரபஞ்சம்
2. என்னோடு நான்
(2003ஆம் ஆண்டுக்கான
கவிப்பேரரசு வைரமுத்துவின்
கவிஞர்கள் திருநாள் விருது
பெற்றது)
3. ஒற்றைக்கனவும்
அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றது)
4. அனுபவ சித்தனின்
குறிப்புகள்
5. நினைவுகளின் நகரம்
6. மீனுக்கு நீரெல்லாம்
பாதைகள்
7. மைக்ரோ பதிவுகள்
கவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
அருமை
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteVery Excellent.
ReplyDeleteExcellent.
ReplyDeleteMany people
are living
still through
the love of
few people.
குழந்தைகளை
ReplyDeleteஇயற்கை சூழலோடு
இணைப்பதே ஆக்கப்பூர்வமான
சிந்தனைகளுக்கு வித்து..!