*அன்பின் கையெழுத்து*
“ஒரு மழை நாளில்
ஓர்
குடைகீழ்
நாம்
நிற்க
என்
கையெழுத்திட்டு
நான்
உனக்கு
வழங்கிய
புத்தகம்
இதோ
இத்தனை
வருடங்கள்
கழித்து
ஒரு
பழைய
புத்தகக்
கடையில்…
வாங்கிச்
செல்கிறேன்.
புத்தகத்தில்
அழிந்திருக்கிறது
என்
பெயரும்
நம்
அன்பும்..!”
*ராஜா சந்திரசேகர்*
(01.10.2008 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)
இதழில் பிரசுரமானது)
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் ராஜா சந்திரசேகர்*
பிடித்த வாசகம்:
"என்னவும் செய்.
செய்வதில் நீ இரு."
ராஜா சந்திரசேகர் எழுதிய
கவிதைத்தொகுப்புகள்:
1. கைக்குள் பிரபஞ்சம்
2. என்னோடு நான்
(2003ஆம் ஆண்டுக்கான
கவிப்பேரரசு வைரமுத்துவின்
கவிஞர்கள் திருநாள் விருது
பெற்றது)
3. ஒற்றைக்கனவும்
அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றது)
4. அனுபவ சித்தனின்
குறிப்புகள்
5. நினைவுகளின் நகரம்
6. மீனுக்கு நீரெல்லாம்
பாதைகள்
7. மைக்ரோ பதிவுகள்
கவிதை மிக அருமை.
ReplyDeleteநன்று.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
கவிதை அருமை. உங்கள் கவிதை தொகுப்பு வெளியாவது எப்போது?
ReplyDeleteமுயற்சிக்க வேண்டும்
Deleteசிவா.
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
நட்பின் பரிசை
ReplyDeleteஉதாசீனம் செய்வது
வேதனையின் உச்சகட்டம்!