*கடவுள் டூரிஸ்ட் கைடாகிறார்*
“பக்தியின் பரவசத்தில்
எல்லோரும்
பிராகாரத்தைச் சுற்றி
ஆலயத்தில்
இறைவனைக் காண
அடித்துப்
பிடித்து
மூலஸ்தானத்தின்
முன்நின்றபடி
இருகைக்
கூப்பி பிரார்த்தனை
செய்து
கொண்டிருக்க…
அந்தக்
கோவிலில்
குழந்தையொன்று
பெற்றோர்களின்
கையை
விட்டுவிட்டு
கடவுளின்
தோள்மீது
கைபோட்டபடி
சுற்றிப்
பார்த்துக் கொண்டிருந்தது
பஞ்சுமிட்டாய்க்காரனையும்,
பலூன்காரனையும்…
கடவுள்
அங்கே
தன்
அவதாரம் மறந்து
குழந்தைக்கு
டூரிஸ்ட் கைடாகிறார்..!”
*வழிப்போக்கன்*
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
கவிதை மிக அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை மிக மிக அருமை.
ReplyDelete