*இடது கை*
“கைகளிரண்டில்
இடது
கையை எனக்குப் பிடிக்கிறது.
ஏனெனில்
இதற்கே
உடலின் அந்தரங்கங்கள்
நன்கு
அறிமுகம்.
விளையாட்டு
மும்முரத்தில்
சாக்கடையில்
விழும் பமபரங்கள்
கோலிக்காய், குச்சிக் கம்பு
எதுவானாலும்
யோசியாமல்
துழாவி
எடுத்துத் தரும்.
இடது
கை ஏரை பிடிக்கும்.
வலது
கை சாட்டையைப் பிடிக்கும்.
சாமி
படக்காலண்டர் மாட்ட
சுவரில்
ஆணி அடிக்கையில்
அதைப்
பிடித்துக்கொள்ளும்.
வலது
கை தப்புச்செய்தால்
வலுவாய்ச்
சுத்தியலடி வாங்கிக் கொள்ளும்..!”
*கலாப்ரியா*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கலாப்ரியா*
(பிறப்பு: சூலை 30, 1950)
தமிழின் நவீன கவிஞர்களில்
குறிப்பிடத்தக்கவர்.
எழுபதுகளில் எழுதத்
தொடங்கியவர்.
கலாப்ரியாவின் இயற்பெயர்
சோமசுந்தரம்.
சிறு வயதில் எம்.ஜி.ஆர்
ரசிகனாய் தி. மு. க
தொண்டனாக தீவிரமாக
இயங்கினார்.
அறிஞர் அண்ணாவின்
இரங்கல் கூட்டத்திற்காக
முதன்முதலில் கவிதை
(இரங்கற்பா) எழுதிய
சோமசுந்தரம்,
வண்ணநிலவனின்
கையெழுத்து இதழான
பொருநையில் கவிதை
எழுதும் போது தனக்குத்
தானே 'கலாப்ரியா' என்று
பெயர் சூட்டிக்கொண்டார்.
பின்னர் கசடதபறவில்
கவிதைகள் வெளிவரும்போது
கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
கசடதபறவிற்கு பின்
வானம்பாடி, கணையாழி, தீபம்
ஆகிய இதழ்களில் எழுதினார்.
கலாப்ரியாவின் கவிதைகளில்
பாலுணர்வு வெளிப்பாடுகளும்
சில வேளைகளில் வன்முறையும்
கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது
என்று சிலரும், இது அவரது
கவிதை மாந்தர்கள் வாழ்வை
ஒட்டியது என்று சிலரும்
கருதுவதுண்டு {பேராசிரியர்
தமிழவன் படிகள் இதழில்
எழுதிய கட்டுரை,
ஜெயமோகன், கலாப்ரியா
கவிதைகள் தொகுப்புக்கு
எழுதியுள்ள முன்னுரைகள்}.
நெல்லை மாவட்டம்
கடையநல்லூரில் வங்கிப்
பணி நிறைவு பெற்றவர்.
தன்னை சுற்றி நிகழும்
விஷயங்களை கவிதைகளில்
பதிவு செய்து வருகிறார்
'கலாப்ரியா'.
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
மிக அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteஅருமை வித்தியாசமான கோணம்.
ReplyDeleteமிகவும் அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.