எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 20 December 2021

படித்ததில் பிடித்தவை (“இரு வார்த்தைகள்” – ராஜா சந்திரசேகர் கவிதை)



*இரு வார்த்தைகள்*

 

சற்று வயது கூடிய

வேலைக்காரன்

தன் நுட்பம் கலையா

விரல் பாவங்களுடன்

மிக மெதுவாய்

மரம் அறுத்து

சரி பார்த்து

தக்கபடி பொறுத்தி

வடிவம் அளந்து

ஆணிகள் அடித்து

வருடிக் கொடுத்து

தன்னையே

ஒரு முறை பெயர்த்து

கிடத்தி

பின் எடுத்து

கண்ணோரம் வந்த

ஒரு சொட்டை

பொட்டு போல் வைத்து

துக்க வண்ணம் பூசி

மரத்துகள்களை

அப்புறப்படுத்தி

மஞ்சள் வெயில் பட

உருவாக்கிய சவப்பெட்டியை

பார்த்தபடி

இருக்கும்போது

அவன் உதடு

சத்தமின்றி சொல்கிற

இரு வார்த்தைகள்

உயிர் வந்திடுச்சி..!

 

*ராஜா சந்திரசேகர்*




7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. கமலநாதன்20 December 2021 at 10:52

    மிகவும் அருமை.
    ����

    ReplyDelete
  3. கெங்கையா20 December 2021 at 10:53

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை20 December 2021 at 10:54

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  5. சிவபிரகாஷ்20 December 2021 at 12:49

    Ha...ha...
    never thought of
    this angle. Wow.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்20 December 2021 at 12:51

    உயிரற்ற உடலை
    சுமந்து செல்லும்
    சவப்பெட்டியே ஆனாலும்
    கலைநயத்தோடு அதை
    சிரத்தையாக செய்யும்
    தச்சுத் தொழிலாளர்
    போற்றுதலுக்குரியவர்.

    ReplyDelete