*எதிர்பார்ப்பு*
“ஒரு வேளை உணவு உண்ட
வேலைக்காரி
நன்றி
விசுவாசத்தை
வேலையில்
திரும்பக்
காட்டவேண்டும்...
உண்டியலில்
காசு இட்டதும்
வேண்டுதல்
நிறைவேறும்
அருளை
இறை திரும்பத் தந்திட வேண்டும்…
சாலையோரப்
பிச்சைக்காரனுக்கு
இடும்
சில்லரையோடு
கைகூப்பலும்
வந்திட வேண்டும்...
என்றோ, யாருக்கோ
வழங்கிய
உதவியோ, கருணையோ,
இரக்கமோ, புன்னகையோ…
திருப்ப
எதிர்பார்க்கும்
வாலாட்டும்
நாயாய்
மனம்
அலைகிறது..!”
*செ.புனிதஜோதி*
கவிதை அருமை.
ReplyDeleteபாராட்ட வார்த்தைகள்
இல்லை!
கவிதை அருமை.
ReplyDeleteபெருமளவு மக்கள் எதிர்ப்பார்த்து தான் இருக்கின்றார். ஒரு சிலர் வேண்டுமானால் மறுக்கலாம். அருமையான பதிவு
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.