*தலையெழுத்து*
“மதிய உணவுக்காக
பள்ளிக்கு
அனுப்பிய
அம்மா...
நூறு ரூபாய் காசு
கொடுத்து
குழந்தைத் தொழிலாளர்களை
பள்ளிக்கு
வரவழைத்த
அரசாங்கம்...
திரிவிளக்குப்
பார்த்து
தெருவிளக்கு
போடவைத்த
பக்கத்துவீட்டு
மின்சாரவாரிய
அதிகாரி…
புரியாதப்
பாடத்திற்கு
இலவசமா
டியூசன் எடுத்த
சமூக
சேவை மன்றம்…
இத்தனையும்
கிடைச்சும்
படிக்கவிடாம
தீப்பெட்டி ஆபீசுக்கு
அனுப்பிய
குடிகார அப்பா...
எங்கதலைவிதி
தலையில்
எழுதவில்லை...
தண்ணீரில்
எழுதியிருக்கு..!”
*செ.புனிதஜோதி*
அருமை
ReplyDeleteசிறப்பான பதிவு.
ReplyDeleteகொடுமை ஆனால் நிதர்சனம்.
ReplyDeleteVery Practical.
ReplyDeleteExcellent.
மிக அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete