எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 1 December 2020

படித்ததில் பிடித்தவை (“எனக்கு பேய் பிடித்திருக்கிறது” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*எனக்கு பேய் பிடித்திருக்கிறது*

 

அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள்.

இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும்

எனக்கும் பேய் பிடித்திருக்கிறது.

 

அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி,

பேய்களுக்குக் கோயில் இல்லை...

வேளா வேளைக்குப் பூஜை இல்லை...

அபிஷேகம் அலங்காரம்

காணிக்கை உண்டியல் அறவே இல்லை...

தேர் இல்லை... திருவிழா இல்லை...

சப்பர பவனி கூட இல்லை.

 

கடவுளைப் போல் பேய்கள்

சாதி மதம் பார்ப்பதில்லை.

 

ஓட்டத்தான் வேண்டுமெனில்

கடவுள்களை ஓட்டிவிட்டு

பேய்களை ஓட்டுங்கள்..!

 

 *சேயோன் யாழ்வேந்தன்*


No comments:

Post a Comment