எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 5 December 2020

படித்ததில் பிடித்தவை (“பிரிவுகள்” – கலாப்ரியா கவிதை)

 


*பிரிவுகள்*

 

நாளை இந்தக் குளத்தில்

நீர் வந்து விடும்.

இதன் ஊடே

ஊர்ந்து நடந்து

ஓடிச் செல்லும்

வண்டித் தடங்களை

இனி காண முடியாது.

இன்று புல்லைத்

தின்று கொண்டிருக்கும்

ஆடு, நாளை

அந்த இடத்தை

வெறுமையுடன்

சந்திக்கும்.

மேலே பறக்கும்

கழுகின் நிழல்

கீழே

கட்டாந்தரையில்

பறப்பதை

நாளை பார்க்க முடியாது.

 

இந்தக் குளத்தில் நாளை

நீர் வந்து விடும்..!

 

*கலாப்ரியா*


No comments:

Post a Comment