*காலியிடங்கள்*
“பறவைகள்
இறந்த பிறகு
காலி பறவைக் கூண்டுகள்.
மீன்கள் இறந்த பிறகு
காலி மீன் தொட்டிகள்.
வளர்ப்பு நாய்கள் இறந்த
பிறகு
காலி நாய்ச்சங்கிலிகள்.
தொட்டிச் செடிகள் இறந்த
பிறகு
காலித்தொட்டிகள்.
மனிதர்கள் இறந்து
போகிறார்கள்.
மற்றெதையும் போல
அவ்வளவு தெளிவாக
இருப்பதில்லை
அது..!”
*மனுஷ்யபுத்திரன்*
No comments:
Post a Comment