எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 10 December 2020

படித்ததில் பிடித்தவை (“வழி தவறியவன்” – வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதை)

 


*வழி தவறியவன்*

 

யாழ்நகரில் என் பையன்

கொழும்பில் என் பெண்டாட்டி

வன்னியில் என் தந்தை

தள்ளாத வயதினிலே

தமிழ்நாட்டில் என் அம்மா

சுற்றம் பிராங்க்பர்ட்டில்

ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்

நானோ

வழிதவறி அலாஸ்கா

வந்துவிட்ட ஒட்டகம் போல்

ஒஸ்லோவில்..!

 

*வ.ஐ.ச. ஜெயபாலன்*

(ஈழத்து கவிஞர் & நடிகர்)


2 comments:

  1. ஸ்ரீராம்11 December 2020 at 08:53

    குருரமாக வேர் அறுக்கப்பட்ட சமுகத்தின் வேதனையில் வடிக்கப்பட்ட கவிதை.

    ReplyDelete