எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 5 May 2020

படித்ததில் பிடித்தவை (“இப்படித்தான்” – கல்யாண்ஜி கவிதை)


இப்படித்தான்

அடைக்கப்படும் கதவின்
விருப்பமான சத்தத்திற்காக
உள் அறையில் காத்திருக்கிறேன்.

மிகுந்த கவனத்துடன்
சத்தமே கேட்காமல்
சாத்திவிட்டுப் போகிறார்கள்.

இப்படித்தான் ஒரு காரணமுமின்றி
இழந்துவிடநேர்கிறது
இன்னும் சிலவற்றை..!”

         - கல்யாண்ஜி.

No comments:

Post a Comment