வித்தியாசமான மியாவ்
எனக்குத்
தெரிந்த பூனை ஒன்று
நேற்று
இறந்தது.
சவ
அடக்கத்துக்கு
நாங்கள்
போயிருந்தோம்.
என்
நண்பனின் மனைவி
அழத்
தொடங்கியபோது
என்
மனைவியும் அழுதாள்.
குழந்தைகள்
அழுதன.
சில
வார்த்தைகள் பேசும்படி
என்
நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்.
நான்
பேசத் தொடங்கினேன்:
‘இந்தப் பூனையின் மியாவ்
மியாவ்
வேறு
பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது.
மேலும்...’
No comments:
Post a Comment