அப்பாவின் ஞாபகம்
“ஆசிரியப்பணியில்
முதல்முறையாய்
பணியில் சேர்ந்தேன்
அந்த
இரண்டாம் வகுப்பில்
பாடம்
நடத்துகையில்
ஒரு
சிறுமியின்
அழுகை
காரணம்
கேட்டேன்
‘அப்பாவின் ஞாபகம்’
என்றாள்.
‘ஊருக்கு போயிருக்கிறாரா..?’
‘இல்ல போனவருசம்
செத்துப்
போயிட்டார்’
‘ஞாபகம் ஏன் திடீரென்று?’
‘உங்க சட்டை மாதிரியே
அவரும்
போட்டிருப்பார்’
சட்டையின்
கோடுகளுக்குள்
ஒரு
ஞாபகத்தின் சிறையிருப்பு
கழற்றி
போடும்வரை
கனமாகவே
இருந்தது
உடம்பில்..!”
No comments:
Post a Comment