படித்ததில் பிடித்தவை (“குற்ற மனசு” – ஜெ.முருகன் கவிதை)
குற்ற மனசு
“ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட
பிறகும்
ராவோடு
ராவாக
புதிய
எஜமானனின்
தொழுவத்துக்
கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து
கிலோமீட்டர்
பயணம்
செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு
வாசலில்
வந்து
நிற்கிற
வெள்ளைப்
பசுவைப்
பார்க்கும்போது
உறுத்தத்தான்
செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு..!”
- ஜெ.முருகன்.
No comments:
Post a Comment